பொழுதுபோக்கு

புத்தாண்டு கொண்டாட லண்டன் செல்லும் விஜய்..! வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Malaimurasu Seithigal TV

விஜயின் வாரிசு

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. ராஷ்மிகா, குஷ்பு, சரத்குமார், பிரபு என ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படம்‌ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

தீ தளபதி.. ரசிகர்கள் வெயிட்டிங்

இப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரண்டு பாடல்கள் தற்போது வரை பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளன. இதனை அடுத்து விஜய் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்றுதான். ஏனென்றால் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் பேச்சிற்காக அவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு உள்ளனர்.