பொழுதுபோக்கு

’மகாராஜா’ வாக மாறிய விஜய் சேதுபதி..! 50-வது படத்தின் புதிய அப்டேட்..!

Malaimurasu Seithigal TV

விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

விஜய் சேதுபதியின் 50-வது படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

இப்படத்தில் நட்டி, முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு மகாராஜா என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.