பொழுதுபோக்கு

பீஸ்ட்-டின் ‘சென்சார்’ , ரன்னிங் டைம்’ என்ன? தகவல் வெளியாகிவிட்டதா..?

விஜய்யின் ‘பீஸ்ட்’ பட சென்சார் மற்றும் ரன்னிங் டைம் செய்திகள் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Selvi Selvakumar

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இதனையடுத்து இந்த ஆண்டின் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘பீஸ்ட்’ திரைப்படம் விளங்குவதால் உலக அளவில் வசூலில் மிகப்பெரிய சாதனையை எட்டும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சென்சாருக்கு விண்ணப்பித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து ’யூஏ’ சான்றிதழ் அளித்து உள்ளதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் சென்சார் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்களுடன் கூடிய புதிய போஸ்டர் இன்று அல்லது நாளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.