பொழுதுபோக்கு

இந்தியில் விக்ரம் வேதா படப்பிடிப்பு தொடக்கம்..!!

Malaimurasu Seithigal TV

தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் செய்ய உள்ள நிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதையடுத்து, இந்தப் படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று விஜயதசமியை முன்னிட்டு அரபு நாடுகளில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.