பொழுதுபோக்கு

அண்ணாத்த... துள்ளி குதித்த ரசிகர்கள்.... வைரலாகும் வீடியோ...

கடலூரில் நடைபெற்ற

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி: அண்ணாத்த படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகின்றார். படையப்பா படத்திற்கு பிறகு ரம்யாகிருஷணன் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றார்.

இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் அருகே அழகியநத்தம் தென்பெண்ணையாற்று பாலம் அருகே நேற்று துவங்கியது.

இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் புதுச்சேரியில் இருந்து கடலூர் சென்றபோது புதுச்சேரி எல்லையில் ரஜினிக்கு ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பளித்தனர்.

அப்போது காரின் கண்ணாடியை திறந்து பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு கையசைத்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.