பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனுடன் இணைந்த விருமன் நாயகி:

விருமன் படத்தின் நாயகி மற்றும் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி, சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கும் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், தற்போது, அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மாவீரன்:

ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில், மண்டேலா படத்தின் இயக்குனரான தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கி வரும் படம் தான் மாவீரன். சிவகார்த்திகேயனின் 22வது படமான இந்த படம், தற்போது நடந்து வரும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெறும் நம் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றும் வெளியிட்டு, மக்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 28ம் தேதி படம் குறித்த தகவல் வெளியானதில் இருந்து, படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில், படத்தில் நாயகியாக அதிதி இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் படு ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.

மேலும், இன்று விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து வரும் நிலையில், இந்த அப்டேட், பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.