vishal dhanshika  
பொழுதுபோக்கு

என்ன இவங்க ரெண்டு பேருமா? இசை வெளியீட்டு விழாவில் திருமணத்தை அறிவித்த விஷால் தன்ஷிகா!

தொடர்ந்து நடிப்பார் என்றும், அவருக்கு இருக்கும் திறமையை தடை செய்ய நான் யார் என்றும்

Mahalakshmi Somasundaram

செல்லமே திரைப்படத்தில் தொடங்கி இன்று வரை பல படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் கலந்து கொண்ட யோகிடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான நிகழ்வை வெளியிட்டிருந்தார்.

மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பேராண்மைனை படத்தில் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் தன்ஷிகாவை வரும் ஆகஸ்ட் 29 திருமணம் செய்து கொள்ள உள்ளதாக மேடையில் விஷால் அறிவித்துள்ளார்.

vishal and dhanshika

மேலும் திருமணத்திற்கு பிறகும் தன்ஷிகா திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்றும், அவருக்கு இருக்கும் திறமையை தடை செய்ய நான் யார் என்றும், எப்போது நாங்கள் நல்ல ஜோடியாக இருப்போம். வடிவேலு சரளாமா போல சண்டை போட்டு கொள்ள மாட்டோம் என்றும் பேசினார்.

விஷால் பேசுவதற்கு முன்னர் “என்ன பேபி சொல்லிடலாம” என பேச தொடங்கிய தன்ஷிகா நாங்கள் இருவரும் 15 வருடங்களாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம். சமீப காலத்தில் இது காதலாக மாறியது என்றும் விஷால் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். நான் அவரை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்