விஷால் கடைசியாக ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘எனிமி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து தற்போது து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் 31 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் டிம்ப்லே ஹயடி கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்க விஷால் ஹைதராபாத் சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஹைதராபாத்தில் விஷால் 31 படத்திற்கான படப்பிடிப்பை நாங்கள் மீண்டும் தொடங்குகிறோம் இது ஒரு நீண்ட கால அட்டவணையாக இருக்கப்போகிறது & ஜூலை இறுதிக்குள் திரைப்படத்தை முடிக்க உள்ளோம்.
எல்லா பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது. மீண்டும் பணிக்கு வந்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.