லத்தி சார்ஜ்
தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்துவரும் நடிகர் விஷால் இப்போது இயக்குனர் வினோத்குமார் மற்றும் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் உருவாகும் லத்தி திரைப்படத்தில் நடுத்தரவாழ்வு வாழும் காவலராக நடித்திருக்கிறார். இவருக்கு மனைவியாக சுனைனா நடித்திருக்கிறார் . எப்போதும் துரு துருவென இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் விஷால் இந்த படத்தில் அன்பான கணவராகவும் கண்டிப்பான தந்தையாகவும் நடித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்ககின் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது .
குடும்பத்தலைவராக நடிகர் விஷால்
விஷால் (முருகானந்தம் )காவலராக பணியாற்றிவருகிறார். இவர் தன் மனைவி மகனுடன் மிகவும் ஆனந்தமாக நடுத்தரவாழ்வு வாழ்ந்து வருகிறார். இவருக்கு அங்குள்ள அரசியல்வாதி எதிரியாகிறார். அமைதியாக சென்றுகொண்டிருந்த வாழ்வில் இன்னல்கள் சுழல அமைதி கெட்டு பரிதாபமாக மாறுகிறது முருகனந்தனின் நிலைமை.
கட்டடத்தில் கண்ணாமூச்சி
முருகானந்தம் தனது மகனுடன் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் எதிரிகள் விரித்த வலையில் மாட்டிக்கொள்கிறார். எல்லா திசையிலும் எதிரிகள் சுழல அங்கிருந்து எப்படி தன் மகனுடன் எதிரிகள் கண்களில் மண்ணை தூவி புத்திசாலித்தனமாக மீண்டு வருகிறார் என்பதே இப்படத்தின் கரு கதை.படத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக காணப்படுகிறது .
உடலில் ஏற்பட்ட காயங்கள்
இப்படத்தில் சண்டை காட்சிகள் எடுத்தபோது நடிகர் விஷாலுக்கு உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டது.
இதனை பொருட்படுத்தாமல் தனக்கு கொடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளை அவரே நடித்தார் என படக்குழுவினர் இவரது உழைப்பை பாராட்டி கூறியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகும் லத்தி.
முன்னதாக வெளியான லத்தி படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வருகின்ற டிசம்பர் 22, 2022 இல் லத்தி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆக்சன், காமெடி ,த்ரில்லர் என விறுவிறுப்பான கதை கொண்டிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். பொன் பார்த்திபனின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'மாஸ்டர்' மற்றும் 'சர்தார்' படங்களின் ரசிகர்கள் லத்தியை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
-சுவாதிகா ரெங்கராஜன்