பொழுதுபோக்கு

நடிகர் விஷால் வீடு தாக்கப்பட்டதா..? என்ன காரணம்..?

நடிகர் விஷால் வீடு மர்ம நபர்களால் தாக்கப்பட்டது

Malaimurasu Seithigal TV

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால். அவரது வீடு நேற்று முன் தினம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிவப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், விஷாலின் வீட்டை நோக்கி கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் வீட்டின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. 

பின்னர், இதுகுறித்து நேற்று விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன், அண்ணாநகர் கே-4 காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது நடிகர் விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.