எனக்கும் கனெக்ட் ஆகுது.. நானும் இந்த ஜெனெரேஷன் தான்
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்று கொடுத்திருந்தார், அதில் அவர் லவ் டுடே படம் பற்றி பேசியிக்கிறார். அப்போது ரசிகை ஒருவர், 7 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட நீங்கள் இப்போது இருக்கும் காதலை பற்றி என்ன நினைக்குறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு உதயநிதி, நான் சமீபத்தில் லவ் டுடே என்று ஒரு படம் பார்த்தேன், அதில் கதாநாயகனும் கதாநாயகியும் சண்டை போட்டுக் கொள்வதை போன்று தான் இப்போதும் நானும் என் மனைவி க்ரிதிக்காவும் சண்டை போட்டு கொள்ளவோம். அந்த படம் இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு நிறைய கனெக்ட் ஆகும். எனக்கும் கனெக்ட் ஆகுது, நானும் இந்த ஜெனெரேஷன் தான்... என்ன சின்ன வயசுலயே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன் அவ்வளவு தான் என்று கலகலப்பாக பதிலளித்துள்ளார்.
முதலமைச்சருக்கு பிடித்த லவ் டுடே
கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் லவ் டுடே. இப்படம் பார்வையாளர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதியிடம் என்ன படம் இப்போ போயிட்டிருக்கு என்று கேட்டுள்ளார்.
அதற்கு லவ் டுடே_னு ஒரு படம் ரிலீஸ் பண்ணியிருக்கோம், நல்லா இருக்கு பா என்று சொன்னதையடுத்து, தனது அப்பா, அம்மா, சகோதரி மற்றும் மனைவியையும் படத்திற்கு அழைத்து சென்று காண்பித்துள்ளார் உதயநிதி. படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் சூப்பராயிருக்கு என்று கூறியுள்ளார். இதன் மூலம் லவ் டுடே படம் இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல என்னுடைய அப்பாவின் தலைமுறைக்கும் கனெக்ட் ஆகுதென்று கேலியாக பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
கணவரிடம் கிண்டலடித்த துர்கா ஸ்டாலின்
தொடர்ந்து நேர்காணலில் பேசிய உதயநிதி... இன்ஸ்டாகிராம், டிண்டர் பற்றியெல்லாம் தெரியாத தனது அப்பா அம்மாவிற்கு இப்படம் பிடிக்குமா? பிடிக்காதா? என்று நினைத்தேன் ஆனால் இருவருமே லவ் டுடே படத்தை ரசித்து பார்த்தது மட்டுமல்லாமல், படம் ரொம்ப நல்லாயிருக்கு என்றும் கூறினர்.
இதில் காமெடியே எங்க அம்மா தான் என்று துர்கா ஸ்டாலின் பற்றி ஒரு சுவாரசியமான செய்தியொன்றையும் உதயநிதி பகிர்ந்தார். லவ் டுடே படம் முடிந்து வெளியே வந்து படத்தை பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென எனது அம்மா படம் நல்லா இருக்குல்ல; சரி வாங்க நம்ம எல்லாரும் செல்போனை மாத்திக்கலாம் என்று கேட்டதும், நானும் என் அப்பாவும் அய்யோ ஆளை விடுங்க சாமி_னு போயிட்டோம் என்று உரக்கச் சிரித்தார் உதயநிதி ஸ்டாலின்.