பொழுதுபோக்கு

கட்டுமஸ்தான உடலுடன் ஜிம்மில் ஹாட் கவர்ச்சி போஸ் கொடுத்த வலிமை பட வில்லி வி.ஜே.பாணி!!

ஜிம் சூட்டில் ஹாட் கவர்ச்சி போஸ்  கொடுத்த வலிமை பட வில்லி வி.ஜே.பாணியின் புகைப்படங்கள் தான் தற்போது  இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

Tamil Selvi Selvakumar

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் வி.ஜே.பாணி என்று அழைக்கப்படும் பாணி ஜே. ஒரு சிறந்த ஃபிட்னெஸ் மாடல் ஆன இவர், ஒரு தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளிணி ஆவார். அதுமட்டுமில்லாமல் ஒரு சிறந்த நடிகையும் ஆவார். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவான ‘ரோடீஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் தான் ஹிந்தி, பஞ்சாப், தெலுங்கு என வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வந்த வி.ஜே.பாணி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

அதே சமயம் இவர் படங்களிலில் மட்டுமல்லாமல் ”ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்” என்ற வெப் தொடரில் நடித்ததின் ,மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் தற்போது இவர் வலிமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். அதே சமயம் ஒரே படத்தின் மூலம் வெகுவான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சில நடிகைகளில் வி.ஜே.பாணியும் ஒருவர் என்றே கூறலாம்.

என்னதான் தற்போது இவர் நடிப்பின் மூலம் பிரபலமானவர் என்றாலும், தனது கட்டுமஸ்தான உடலமைப்பால்  ரசிகர்களையெல்லாம் ஏற்கனவே வென்றவர். இவர் ஒரு ஃபிட்னெஸ் மாடல் மற்றும் ஃபிட்னெஸ் ஆர்வலர் என்பதால் எப்பொழுதும் உடற்பயிற்சிகளை செய்துக்கொண்டிருப்பார். இவரது சோஷியல் மீடியாபக்கங்களை எடுத்தோம் ஆனால் ஃபிட்னஸ் பற்றிய வீடியோக்களும், அவரின் உடற்பயிற்சி வீடியோக்களும் தான் இருக்கும். அந்த அளவிற்கு இவர் ஒரு ஃபிட்னஸ் பைத்தியம் என்றே சொல்லலாம். 

அப்படி ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் போது எடுக்கும் ஹாட் கவர்ச்சி போட்டோக்களையும், உடற்பயிற்சி வீடியோக்களையும்  அவ்வப்போது வி.ஜே.பாணி தனது இன்ஸ்டகிராம்  பக்கத்தில் வெளியிடுவார். அந்த வகையில் வலிமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை விஜே.பாணியின் லேட்டஸ்ட் ஜிம் ஒர்க்கவுட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சிலர் சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் ” வலிமை பட வில்லன விட உங்க பாடி ஷேப் செமையா இருக்கு” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.