பொழுதுபோக்கு

கமல்ஹாசனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை கையில் எடுத்த யோகிபாபு..!!

புது அவதாரமாக புதிய படத்தில் யோகிபாபு பெண் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Malaimurasu Seithigal TV

2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் தன் பெயரை யோகிபாபு என்று மாற்றிக் கொண்டார். இதையடுத்து பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் சொல்லிக்கொள்ளும் படி முகம் அறியப்படாத நிலையில், தன்னுடைய விடா முயற்சியால் தற்போது வெற்றி அடைந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து யாமிருக்க பயமேன் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தற்போது ஒரு புது அவதாரத்தில் நடிக்க இருக்கிறார் யோகிபாபு. அவ்வை சண்முகி படம் முழுவதும் பெண் வேடத்தில் இருப்பதை போல, முதன்முறையாக யோகிபாபு பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இவருடைய டைமிங் காமெடிகளை ரசிகர்கள் அதிகம் வரவேற்று இருந்தனர். அதேபோல இந்த புது கெட்டப் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.