பொழுதுபோக்கு

ஆண்கள் எப்போழுதும் பாலியல் எண்ணங்களுடனேயே இருப்பவர்களா!!சமந்தா ஆடிய பாடலுக்கு எதிராக கொதித்தெழுந்த இளைஞர்கள்..!!

புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள  ஓ சொல்றியா மாமா பாடலுக்கு  எதிராக ஆந்திரா இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

செம்மர கடத்தல்காரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள  புஷ்பா  திரைப்படம்  250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த  படம் உலகம் முழுவதும் டிசம்பர் 17ஆம் தேதி தெலுங்கு, தமிழ்,  மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் புஷ்பா படத்தில் முதல் முறையாக அயிட்டம் சாங் ஒன்றில் அல்லு அர்ஜுனுடன்  நடிகை சமந்தா நடனமாடினார். இந்த பாடலுக்காக சமந்தாவிற்கு ரூ.1.5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டது.  நேற்று முன்தினம் வெளியாகியுள்ள இந்த பாடல் தென் இந்தியா முழுவதும் மிக வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஒருவர் இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலில் வரும் வரிகள் ஆண்கள் மோசமான மனநிலை உடையவர்கள், அவர்கள் எப்போதும் பாலியல் எண்ணங்களுடனேயே இருப்பவர்கள் என்ற அர்த்தம் கொண்டதாக எழுதப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.