a cricket lover who named his son virat and his name is gavaskar 
லைஃப்ஸ்டைல்

சென்னையில் ஒரே வீட்டில் கவாஸ்கர் மற்றும் விராட் ..!தலைமுறை தலைமுறையாய் தொடரும் கிரிக்கெட் ஆர்வம்..

இந்திய மக்களின் உணர்வு சங்கேதங்களோடு இணைந்த ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.

Saleth stephi graph

சென்னையில் ஒரே வீட்டில் வசிக்கும் கவாஸ்கரும், விராட்டும் … தலைமுறை தலைமுறையாய் தொடரும் கிரிக்கெட் ஆர்வம்.

இந்திய மக்களின் உணர்வு சங்கேதங்களோடு இணைந்த ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். சுனில் கவாஸ்கர் தொடங்கி, கப்பில் தேவா, சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் டோனி என பல கிரிக்கெட்டர்கள் மக்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டவர்கள்.

அந்த வகையில் தனது கிரிக்கெட் ஆர்வத்தை குடும்ப லெகஸியாக தொடர்ந்து வரும் கவாஸ்கர் அவர்களோடுதான் உரையாடினோம்…ஆம் அவர் பெயரே காவஸ்கர்தான். சென்னை தி.நகர் பகுதியில் வசித்து வரும் கவாஸ்கர் மோட்ரல்லாவின் அங்கீகரிக்கப்பட்ட பாட்னராக இருந்து வருகிறார், புன்னகை பூத்த முகத்தோடு நமது கேள்விகளுக்கு பதில் அளித்தார்…

கவாஸ்கர் என்ற பெயர் எப்படி வந்தது?

எனது தந்தை கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நான் பிறந்த சமயத்தில் சுனில் கவாஸ்கர் மிகவும் பிரபலமான கிரிக்கெட்டர் எனவே, எனக்கு அந்த பெயரை வைத்தார்.

இப்போதும் கிரிக்கெட் விளையாடுகிறேன்?

ஆம்.. நான் கிரிக்கெட் பயணத்தை கொஞ்சம் தாமதமாகவே ஆரம்பித்தேன்..மேலும் நான் வளர்ந்த சமயத்தில் பெரிய அளவில் அதற்கான பயிற்சிகளோ, மையங்களோ இல்லை. 

மகனுக்கும் கிரிக்கெட்டர் பெயர் வைத்தது ஏன்? 

எனக்கு கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது, ஆனால் என்னால் முடியவில்லை.  என் மகன் நிச்சயமாக ஒரு கிரிக்கெட்டராக மாறுவார் என்ற நம்பிக்கையில்தான் அவர் பிறக்கும்போதே விராட் என பெயர் வைத்தேன். மேலும் அவர் விரும்பிதான் கிரிக்கெட் ஆடுகிறார். 

விராட்டுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?

நாங்கள் விராட்டை கிரிக்கெட் விளையாட சொல்லி வற்புறுத்தியதே இல்லை.விராட் ஐபிஎல் மேட்ச் -ல் தோனியை பார்த்துவிட்டுத்தான் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்க துவங்கினார். தோனி தான் அவர் ஹீரோ..

விராத்தின் “ஆட்டம்” தற்போது எப்படி இருக்கிறது?

விராத் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். தொடர்ந்து பயிற்சியில் உள்ளார். விராட் லெஃப்ட் ஹாண்ட் பேட்ஸ்மேன், லெக் ஸ்பின்னர்.. இதில் சுவாரசியம் என்னவென்றால்  அவராகவே பேட்டை லெஃப்ட் -இல் பிடிக்க துவங்கிவிட்டார்.. நாங்கள் யாருமே ஆரை அப்படி அறிவுறுத்தவில்லை (இயல்பில் விராட் வலது கை பழக்கமுடையவர்)

தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி?

நாங்கள் 3 பேருமே காலையில் 5 மணிக்கெல்லாம் மைதானத்துக்குள் சென்றுவிடுவோம்..7.30 கு திரும்பிடவிடுவோம், அதே போல அவர் பள்ளி முடித்து வந்ததும் பயிற்சிக்கு சென்று விடுவார்… வார விடுமுறைகளில் கூட நாங்கள் மைதானத்தில் தான் இருப்போம்.. அவர்நன்றாக விளையாடுகிறார், அவரை ஊக்குவிப்பதுதானே நமது கடமை என சிரித்தபடியே நகர்கிறார் கவாஸ்கர்.