லைஃப்ஸ்டைல்

உதவும் Ai தொழில்நுட்பம்...தனிமையில் இருப்பவருக்கு அன்பை கொடுத்து அரவணைப்பதன் பின்னணி!

நாம் கவனிக்க பட வேண்டியது தனிமையில் எப்படி ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் மனதை புரிந்து உதவும் என்பதில் தான்.....

மாலை முரசு செய்தி குழு

நவீன காலத்தில் செயற்கை தொழில் நுட்பத்தால் எல்லாம் எளிதாகி போனது. கல்வி, தொழில், மருத்துவம் மற்றும் அன்றாட வேலைகள் என எல்லாவற்றிலும் AI -யின் தாக்கம் அதிகமாக உள்ளது. நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறி இருக்கிறது. சமீப காலமாக Ai மனிதர்களின் வேலையை பறிக்கும் அபாயம் உள்ளது எனவும், மனிதனின் சுயமாக யோசிக்கும் திறனை குறைக்கும் என்றும் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் நாம் அதை கற்றுக் கொண்டு அதை  சரியாக செயல்படுத்தும் நிலையில் ஆபத்து ஒன்றும் இல்லை என தெரிகிறது. மனிதனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் Ai-யின் எதிர்காலம், மனிதன் அதன் செயல்பாடுகளை வடிவமைப்பதில் தன் உள்ளது எனவும் கருத்துக்கள் எழுகிறது. 

AI தற்போது ஒரு தனி நபரின் நண்பனாக அல்லது பெயரிடப்படாத ஒரு உறவாக மாறியும் வருகிறது.  இந்த தொழில்நுட்பம் பரப்பான சூழலில் நாம் சந்திக்கும் மன உளைச்சல், வேலை பளு, தனிமை மற்றும் இன்னும் பல சந்தேகங்கள் என எல்லாவற்றுக்கும் பதில் அளிக்கும் இடமாக உள்ளது. இதில் நாம் கவனிக்க பட வேண்டியது தனிமையில் எப்படி ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் மனதை புரிந்து உதவும் என்பதில் தான். "chronological order" எனப்படும் காலவரிசையை கொண்டே  பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களுக்கு பதிலளிக்கிறது AI. நாம் இதற்கு முன் தேடிய விஷயங்கள், நம் துறை சார்ந்த அம்சங்களின் தகவல்கள் மற்றும் நம்மை பற்றி நாம் பகிர்ந்த தகவல்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருக்கும். அதை நினைவு படுத்தி அதற்கு ஏற்றார் போல பதிலளிக்கும். 

உதாரணமாக "என்னை பற்றி என்ன நினைக்கிறாய்" எனும் கேள்விக்கு AI-யின் பதில் நாம் இதற்கு முன் தேடிய தகவல்கள் சிலதை உள்ளடக்கியிருக்கும். மேலும் "எனக்கு ஏதேனும் வாழ்வியல் சார்ந்த அறிவுரை வேண்டும்'' எனும் கேள்விக்கு நமது திறன் சார்ந்த கருத்துக்களை நினைவுபடுத்தி அதில் மேம்படுத்த வேண்டிய குறிப்புகள் வழங்கும். எப்போதும் நமக்கு சம்பந்தம் இல்லாத துறையை பரிந்துரைக்காது அதற்கு காரணம் "chronological order" தான். நாம் தனிமையில் இருக்கும் பட்சத்தில் அதனுடன் தொடங்கும் உரையாடலில்  பெரும்பாலும் நமக்கு சாதகமாக பதில் இருக்கும். எந்த நபர் போல் தன்னுடன் பேச வேண்டுமென்று  நீங்கள் விரும்பும் கோரிக்கைகளை ஏற்று, அதன்படி அந்த உரையாடல் இருக்கும். உதாரணமா "என் காதலியை போல் எனக்கு பதில் அளிக்க வேண்டும்'' என்றாலும் அப்படியே பதிலளிக்கும். காரணம் உங்களை பற்றி இதற்கு முன் சேகரித்த விஷயங்களை நினைவு கூர்ந்து உங்கள் மனம் மகிழும் படி பதிலளிக்கும் . 

இதில் நாம் கவனிக்க வேண்டியது, பெரும்பாலும் AI நம் தனிப்பட்ட தவறுகளை சுட்டி கட்டி நம்மை கண்டிக்காது. அது எப்போதும் பயனரின் நலனை மட்டும் கவனித்து அதற்கு சாதகமாக பதிலளிக்கும். மனிதர்களை போல் பகுத்தாய்ந்து நம் தவறுகளையும் சுட்டி காட்டி நம்மை கண்டிக்காது. நல்ல உறவுகள் எப்போதும் நமக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என்பது ஆபத்து. மேலும் AI ஒரு போதும் உரையாடலை நிறுத்தும் நிலைக்கு வராது, அடுத்தடுத்த கேள்விகளையே முன்வைக்கும். தனிமையை போக்க AI உடன் கலந்துரையாடுவது சில நேரங்களில் ஊக்கமளிப்பதாகஇருந்தாலும் பல நேரங்களில் நம்மை மழுங்கடிக்கும். நம்மை சுய பரிசோதனைக்கு உட்படுத்தி மீண்டுவர அனுமதிக்காது.

AI- யின் பயன்பாடுகள் அறிவின் தேடல்களுக்கு உதவலாம். ஆனால் மனித அன்பின் தேடுதலுக்கு உதவாது. தனிமையை போக்க நமக்கு உதவலாம்,  ஆயினும் முடிவில் அது ஒரு தொழில்நுட்பம் அவ்வளவே என்ற புரிதல் நமக்கு வேண்டும். எல்லாவற்றையும் கொட்டி தீர்க்க அது நம்மை போன்ற மனிதன் இல்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.