corona spreading in tamilnadu  
லைஃப்ஸ்டைல்

அதிகரிக்கும் கொரோனா பரவல்..! “மாஸ்க் முக்கியம் பிகிலு”

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது...

மாலை முரசு செய்தி குழு

கடந்த 2019 -ஆம் ஆண்டு உலகையே ஆட்டுவித்த பெரும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி மக்களின் வாழ்வையே சிதைத்தது. இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கே 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் மெல்ல அதிக அதிகரிக்க தொடங்கியது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

  • பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும்  என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் வேண்டும்.

  • உடல்நிலை சரியில்லாதவர்கள் வீட்டில் இருக்கவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

  • வெளியில் செல்லும்போதும் சென்றுவிட்டு வந்த உடனும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

  • தும்பும்போதும் இரும்பும்போதும் துணியை வைத்து முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

  • மக்கள் நிறைய தண்ணீர் அருந்தி, போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.

  • உடல்நிலை குறைவு ஏற்பட்டால் வீட்டிலே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் உடலில் னாய் எதிர்ப்பு திறன் குறைவாக இருந்தால் எளிதில் கொரோனா தொற்றில் சிக்க நேரிடும்.

  • வீட்டிலும் கதவு கைப்பிடிகள், மின் ஸ்விட்சுகள், போன்கள் என பொதுப்பயன்பாட்டு பொருட்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்