லைஃப்ஸ்டைல்

சிறு தவறால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்.. இன்றே இந்த பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்!

உணவுக் குழாயின் உட்புறத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் தொடரும் பட்சத்தில் திசுவை சேதப்படுத்தி அபாயத்தை அதிகரிக்க...

மாலை முரசு செய்தி குழு

நம் அன்றாட வாழ்வில் நாம் கவனிக்காத அல்லது தெரியாத சில பழக்கங்கள் உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அத சற்று கவனித்து குறைத்து கொண்டாலோ  அல்லது முழுமையாக விட்டுவிட்டாலோ பல உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் அதிக உடல் பிரச்சனைகள் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தொடர்ந்து சிறுநீர் கழிப்பதைத் தாமதப்படுத்துவது  சிறுநீர்ப்பையை அழுத்தத்திற்கு உள்ளாக்கும். காலப்போக்கில், இது சிறுநீர் தொற்று, பாக்டீரியாக்கள் பெருகி, கடுமையான சிறுநீர் பாதை தொற்றுக்களை உண்டாக்கும் என்று குறிப்பிடுகிறார்கள்.
சிறுநீரில் உள்ள தாதுக்கள் படிந்து சிறுநீரக கற்களாக மாறும் அபாயம் உள்ளது. அடிக்கடி இது தொடர்ந்தால் அங்குள்ள தசைகள் விரிவடைந்து வலி ஏற்படும்  மற்றும் சிறுநீரை வெளியேற்றும் திறனையும் இழக்க நேரிடும். சிறுநீரகம் தானாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது, அதன் சீரான இயல்பை மாற்றி அமைப்பது சிறுநீரக செயல்பாட்டை சீர் குலைக்கும்.

பட்ஸ் பயன்படுத்துவது: மருத்துவர்கள் அதை வழக்கமாக எதிர்க்கிறார்கள். பருத்தி துணிகள் பெரும்பாலும் தூசுகளை அகற்றுவதற்கு பதில் ஆழமாகத் தள்ளும். இது அடைப்பு, எரிச்சல் மற்றும் சில நேரங்களில் காதின் உட்பகுதி அல்லது செவிப்பறையில் காயத்தை ஏற்படுத்தும். காது தானாக அதை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.

சூடான உணவு பழக்கம்: இது முக்கியமாக தவிர்க்க கூடிய பழக்கமாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். மிகவும் சூடான உணவு வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாயின் உட்புறத்தை எரிச்சலடையச் செய்யலாம். இந்த பழக்கம் தொடரும் பட்சத்தில் திசுவை சேதப்படுத்தி அபாயத்தை அதிகரிக்க கூடும். சூடான உணவு உட்கொள்வது பசி எடுக்கும் உணர்வை குறைகிறது என்பது சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது. மேலும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு வாயு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சாப்பிடும் போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு எனப்படுவது முற்றிலும் தவறு. இது செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் தற்காலிகமாக வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும், ஆனால் அது செரிமான நொதிகள் வேலை செய்வதைத் தடுக்காது. தண்ணீர் செரிமானத்தை தடுக்கும் என்பது மருத்துவ ரீதியாக முற்றிலும் நிரூபிக்க படாத ஒன்று.

குப்புற படுத்து தூங்குதல்: உடலின் சீரான அமைப்பை மாற்றும். மேலும்  மோசமான நிலைப்பாட்டினால் கழுத்து மற்றும் முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள்  விளக்குகிறார். வயிற்றில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் ஜீரண கோளாறு ஏற்படும். மேலும் தோல் சுருங்கும் அபாயம் உள்ளது.

நெட்டி முறித்தால்: மன அழுத்தம் அல்லது பதற்றத்தின் காரணமாகவும் பலர் இச்செயலைச் செய்கின்றனர். மேலும் சிலர் ஆழ்ந்த யோசனையில் அல்லது சோம்பல் முறிக்கும் விதமாகவும்  நெட்டி முறிக்கிறார்கள். மூட்டுகளில் உள்ள சினோவியல் திரவத்தில் உருவாகும் குமிழிகள் வெடிப்பது இந்த சத்தத்திற்கு காரணம். தொடர்ந்து இப்படிச் செய்வது மூட்டுகளை பலவீனப்படுத்தும் அல்லது நீண்ட காலத்திற்குப் பிறகு மூட்டுகளில் வீக்கம் ஏற்படுத்தவும் செய்யலாம்.

டீ மற்றும் காபி குடிப்பது அவ்வப்போது உடல் சோர்வை தவிர்த்து ஒரு புத்துணர்ச்சி தந்தாலும் அதனை தொடர்ந்து எடுக்கும் பட்சத்தில் சில உடல் பிரச்சனைகள் வருமாம். காபியில் உள்ள காபீன் அதிக அளவில் எடுக்கும் போது உடல்நிலை பாதிக்கும். மேலும் இரத்தத்தில் உள்ள இரும்பு சத்து குறைந்து இரத்த சோகை ஏற்படும் நிலையும் ஏற்படலாம். இந்த பழக்கத்திற்கு அடிமையாகும் பட்சத்தில் சரியான நேரத்தில் டீ காபி எடுக்க முடியாத நிலையில் உடலில் பதட்டம் ஏற்படும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்