விமானப் பயணத்தில் ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு விமானியின் உடல் மற்றும் மனநிலையுடன் நேரடியாக தொடர்புடையது. அதனால் விமானிகள் போதைப்பொருள் அல்லது செயல்திறனை பாதிக்கக்கூடிய psychoactive substances பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிப்பது விமானப் பாதுகாப்பின் முக்கிய அம்சமாக உள்ளது. இந்தியாவில் இந்தப் பரிசோதனைகளுக்கான நடைமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வகுத்துள்ளது. சமீபத்தில் புக்கெட்–டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் உயர இழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து விமானியின் ஆரம்பகட்ட போதைப்பொருள் பரிசோதனை ‘non-negative’ என வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாதிரி உறுதிப்படுத்தும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
‘Non-negative’ என்ற வார்த்தை இங்கு முக்கியமானது. ஆரம்பகட்ட பரிசோதனையில் குறிப்பிட்ட பொருள் இருப்பதற்கான சாத்தியம் தெரிந்துள்ளது என்பதையே அது குறிக்கிறது; உடனடியாக அந்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமில்லை. சில மருந்துகள், குறிப்பாக குறிப்பிட்ட வலி நிவாரணிகள் அல்லது சளி, இருமல், அலர்ஜி போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் சில மருந்துகள் ஆரம்ப screening-ல் false positive அல்லது non-negative முடிவை ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் DGCA நடைமுறையில் confirmatory test முக்கிய இடம் பெறுகிறது.
இந்த பரிசோதனைகள் விமானிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல. பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் விமானப் பணியாளர்கள், trainee pilots, flight instructors மற்றும் examiners, aircraft maintenance engineers மற்றும் certifying staff உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் விதிமுறைகள் பொருந்துகின்றன. இருப்பினும் flight crew மற்றும் air traffic controllers ஆகியோருக்கு ஆண்டுதோறும் random testing கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகளில் பணிபுரிபவர்களில் 10 சதவீதம் பேர் சீரற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டும்.
சாதாரண random testing மட்டுமின்றி, விமானப் பாதுகாப்பு சம்பவம் அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பிறகும் drug test நடத்தப்படலாம். இதன் நோக்கம் ஒரு விமானி அல்லது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பணியாளர் பணியில் இருக்கும்போது அவருடைய செயல்திறனை பாதிக்கக்கூடிய பொருட்களின் தாக்கம் இல்லை என்பதை உறுதி செய்வதாகும். விமானப் பாதுகாப்பில் சிறிய தவறும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதால், இந்த நடைமுறைகள் கடுமையாக வைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனைக்காக பொதுவாக சிறுநீர் மாதிரி சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட மாதிரி இரண்டு தனித்தனி பகுதிகளாகப் பிரித்து பாதுகாக்கப்படுகிறது. முதலில் ஒரு மாதிரியில் screening test நடத்தப்படும். இதில் ‘non-negative’ முடிவு வந்தால், சம்பந்தப்பட்ட விமானி உடனடியாக பறக்கும் பணியில் இருந்து விலக்கப்படுவார். அதன்பிறகு மற்றொரு மாதிரி அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அதிக துல்லியமான confirmatory test நடத்தப்படும்.
இந்த உறுதிப்படுத்தும் பரிசோதனையில் GC/MS அல்லது LC-MS போன்ற உயர் தொழில்நுட்ப ஆய்வக முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆரம்ப screening-ஐ விட குறிப்பிட்ட பொருளை துல்லியமாக அடையாளம் காண உதவும். எனவே ஆரம்பகட்ட non-negative முடிவு மட்டும் ஒருவரை குற்றவாளியாக நிர்ணயிப்பதற்கான இறுதி ஆதாரமாக கருதப்படாது. முதற்கட்ட முடிவு வந்தவுடன் பணியில் இருந்து விலக்கப்படுவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
Confirmatory test-லும் positive முடிவு வந்தால், அடுத்த கட்டமாக Medical Review Officer எனப்படும் MRO-வின் மதிப்பீடு முக்கியமாகிறது. அந்த முடிவு உண்மையான போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்பட்டதா அல்லது மருத்துவரின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட மருந்து காரணமாக ஏற்பட்டதா என்பதை MRO ஆய்வு செய்வார். உதாரணமாக codeine கொண்ட சில வலி நிவாரண மருந்துகள் opiates வகைக்கான பரிசோதனையில் positive முடிவை ஏற்படுத்தக்கூடும். இதனால் விமானிகள் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், புதிய மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன் நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று விமானிகள் சங்கமும் அறிவுறுத்தியுள்ளது.
ஒருவேளை MRO ஆய்வுக்குப் பிறகு போதைப்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்பட்டால், நடவடிக்கை படிப்படியாக கடுமையடையும். முதல் முறையாக positive என உறுதி செய்யப்பட்டவரை rehabilitation திட்டத்திற்கு அனுப்புவது விதிமுறையின் ஒரு பகுதியாகும். சிறப்பு மருத்துவர், counsellor அல்லது de-addiction centre மூலம் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கு புதிய drug test-ல் negative முடிவு மற்றும் மருத்துவ fitness certificate பெற வேண்டும்.
முதல் முறைக்குப் பிறகு மீண்டும் பரிசோதனையில் positive முடிவு வந்தால், விமான உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்படலாம். மூன்றாவது முறையும் positive உறுதி செய்யப்பட்டால் licence ரத்து செய்யப்படும். அதேபோல், பரிசோதனைக்கு உட்பட மறுப்பதும் DGCA விதிகளின்படி தீவிரமாகக் கருதப்படுகிறது. முதல் முறையாக test-ஐ மறுத்தால் பணியில் இருந்து விலக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் test-ஐ முடிக்க வேண்டும். விதிமுறைகளை தொடர்ந்து மீறினால் உரிமம் இடைநிறுத்தம் அல்லது ரத்து போன்ற நடவடிக்கைகள் வரலாம்.
இந்த விதிமுறைகளின் நோக்கம் விமானிகளை தண்டிப்பது மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவதாகும். அதே நேரத்தில், ஆரம்பகட்ட screening முடிவை இறுதி தீர்ப்பாக கருதாமல் confirmatory testing மற்றும் மருத்துவ மதிப்பீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது நடைமுறையின் மற்றொரு முக்கிய அம்சமாக உள்ளது.
விமானப் போக்குவரத்து வளர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பு தரநிலைகளும் அதற்கேற்ப கடுமையாக இருக்க வேண்டியுள்ளது. விமானியின் திறமை, அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன், அவர் பணியில் இருக்கும் நேரத்தில் முழுமையான உடல் மற்றும் மனத் தெளிவுடன் இருப்பதும் அவசியம். அதற்காகவே random drug testing முதல் confirmatory laboratory analysis, medical review மற்றும் தேவையானபோது rehabilitation அல்லது licence action வரை பல அடுக்குகளில் கண்காணிப்பு அமைப்பு செயல்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்