couple bed time talk  
லைஃப்ஸ்டைல்

நீங்க உங்க மனைவியிடம் “Concern” கேக்குறீங்களா!? உடலுறவின் போது உங்கள் பார்ட்னரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள்!!!

பல நேரங்களில் உடலுறவின்போதுதான் மனிதர்கள் அதீத அளவிலான காதல் உணர்வை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...

Saleth stephi graph

ஒரு நல்ல காதல் வாழ்வின் முக்கியமான விஷயம் காமம். ஆனால் பல சமயங்களில் இது வெறும் ஆணின் இன்பம்  மற்றும் உடல் ரீதியான ஒன்றாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால் கலவி  உணர்வும் உடலும் ஒன்று சேரும் இடமாகும். மேலு பல நேரங்களில் உடலுறவின்போதுதான் மனிதர்கள் அதீத அளவிலான காதல் உணர்வை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அது பார்ட்னர்கள் இருவரின் விருப்பு வெறுப்புகள் சங்கமிக்கும் ஒரு இடம், கவனமாக கையாள வேண்டிய ஒரு இடமும் ஆகும்..

ஏன் ஆணின் இன்பமே முன்னிலைப்படுத்தப்படுகிறது!!?

இந்தியா ஒரு Paradoxical சமூகம். இங்கே பல தலைமுறைகளாக ஆண்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். அவர்களின் தேவைகளும் ஆசைகளும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இயல்பாகவே படுக்கை அறையிலும்  அவர்களே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். பரிணாம வளர்ச்சி நெடுகிலும் “வலிமையையும் - அதிகாரமும்” நிறைந்த உயிரினமே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இங்கேயும் அப்படிதான். ஆண்கள் அதிகாரம் செலுத்தும் நிலையை எட்டியவுடன் பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள அவர்களால் இயலவில்லை. ஆனால் 100% ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது..21 ஆம் நூற்றாண்டிலும் 50% -க்கு மேற்பட்ட ஆண்கள் உடல் ரீதியான பெண்ணின் தேவையான  முன்முடிவுக்கு கொண்டு செல்லும் இடத்தில்தான் இருக்கின்றனர். இந்த சூழலில்தான் அதிக அளவிலான திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்கின்றன.

துணையின் விருப்பத்தை கேட்கிறீர்களா!?

பெரும்பாலான நேரங்களில் உடலுறவில் ஈடுபடுவது என்பது வெறும் எந்திரத்தன்மையான் செயலாக இருக்கிறது. தம்பதியர் இருவரும் அதற்கான நேர்த்தியும் கவனத்தையும் ஒதுக்க வேண்டும். ஆணோ பெண்ணோ தங்கள் பார்ட்னரிடம் முன் அனுமதி பெற வேண்டும், நீங்கள் நினைக்கலாம் என் கணவனிடமோ மனைவியிடமோ சந்தோஷமாக இருக்க நான் ஏன் அனுமதி பெற வேண்டும் என்று, ஆம் நிச்சயம் அவர்களின் விருப்பத்தை கேட்க வேண்டும். மனிதர்கள் சமயங்களில் தாங்கள் காதலிக்கும் மனிதருக்காக தங்கள் விருப்பு வெறுப்புகளை மரித்துவிடுவார்கள் அதுவும் குறிப்பாக பெண்கள் கணவர் சந்தோசமாக இருக்கட்டுமே என்று பல விஷயங்களில் வாய் மூடி மௌவுனியாக இருந்துவிட்டு திடீரென ஒரு நாள் வெடிப்பார்கள், திருமண உறவில் இந்த சிக்கல்களை தவிர்க்க எப்போதும் அவர்களின் விருப்பத்தை கேட்பது அவசியம்.மேலும் அவர்கள் வேண்டாம் என்று ஒரு முறை சொன்னால் கூட நோதான், அவரக்ளை சமதப்படுத்தி உடலுறவுக்கு அழைத்தாள் அது அவர்களுக்கு எரிச்சலைத்தான் உண்டாக்கும்.

துணையிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் 

1. உங்களுக்கு நான் முறையாக அன்பும் அக்கறையும் வழங்குகிறேனா!?

 2. உங்களை மரியாதையுடன் நடத்துகிறேனா?
3. உங்களை நன்றாக புரிந்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
4. உங்களுக்கு மேலும் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?
5. நம் எதிர்காலப் பாதையில் நீங்கள் நம்பிக்கை கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
6. நான் எந்த ஒரு குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
7.என்னிடம் உள்ள எந்த பழக்கத்தை குறைக்க வேண்டும்?
8.உடலுறவின்போது நான் செய்யும் எதுவும் உங்களுக்கு சங்கடத்தை அளிக்கிறதா?
9. என்னோடு மகிழ்ச்சியாக உள்ளீர்களா!?
இந்த கேள்வியை எப்போதுவது உங்கள் துணையுடன் கேட்டிருக்கிறீர்களா??கேட்டுப்பாருங்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.