பூமியை நெருங்கவிருக்கும் விண்கல்  பூமியை நெருங்கவிருக்கும் விண்கல்
லைஃப்ஸ்டைல்

பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்! – 2029ல் நடக்கவிருக்கும் அதிசயம்

வரும் ஆண்டுகளில் ஒரு பிரம்மாண்டமான சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரவிருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

Vinvizhi Leninton

ஒரு பெரிய விண்வெளிப் பொருளைக் குறுகிய தூரத்திலிருந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 'god of chaos' என்று அழைக்கப்படும் பண்டைய எகிப்திய தெய்வத்தின் பெயரான 'அப்போஃபிஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது கோளின் மேற்பரப்பிலிருந்து சுமார் 20,000 மைல் தொலைவிற்குள் வரும் என்றும், பொதுவாக பூமத்திய ரேகைக்கு மேலே சுமார் 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் பல செயற்கைக்கோள்களை விடவும் நெருக்கமானதாகும்.

விஞ்ஞானிகள் அப்போஃபிஸை ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு சிறுகோள் என்று கூறுகின்றனர். ஆனால் அதனால் பூமிக்கோ, அதில் வாழ்பவர்களுக்கோ, விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று நாசா கூறியுள்ளது. 'அப்போஃபிஸ்' மற்றும் அதுபோன்ற பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு இந்த நிகழ்வு ஒரு அற்புதமான மற்றும் முற்றிலும் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு என்றும் அவர்கள் கூறுகின்றனர். நாசாவின் கூற்றுப்படி, வானிலை தெளிவாக இருந்தால், கிழக்கு அரைக்கோளத்தில் உள்ள மக்கள் இந்த சிறுகோளை வெறும் கண்ணால் பார்க்க முடியும். இந்த அளவுள்ள ஒரு சிறுகோள் இவ்வளவு அருகில் வருவது மிகவும் அரிதானது மற்றும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விண்கல்லைக் கடந்து செல்லும் போது பூமியின் ஈர்ப்பு விசையானது, அந்த விண்கல்லை நீட்டிச் சுருக்கக்கூடும் என்றும், அதனால் அதன் மேற்பரப்பில் சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நாசா கூறியுள்ளது. 'அப்போஃபிஸ்' விண்கல்லானது, ஆரம்பகால சூரிய மண்டலத்தின் எஞ்சிய பொருட்களால் ஆனது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சிறுகோள் 1,115 அடி சராசரி விட்டத்தைக் கொண்டுள்ளது. இது முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி அரிசோனாவில் உள்ள 'கிட் பீக்' தேசிய ஆய்வகத்தின் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவிலும் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.