லைஃப்ஸ்டைல்

வருகிறது ஒன்பிள்ஸின் புதிய இயர்போன்… அனைவராலும் வாங்க முடியாத விலையில் ஒரு அறிமுகம்…  

ஒன்பிளஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய இயர்போன் தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Malaimurasu Seithigal TV

ஒன்பிளஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய இயர்போன் தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அண்மையில் வெளியான பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இயர்போன் என்பதால் இதன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவராலும் வாங்க முடியாத விலையில், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், ஒன்பிளஸ் உருவாக்கி வரும் புது இயர்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. புது இயர்போன் ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இயர்போன் லைட் பிராண்டிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த இயர்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.