sex in pregnency  
லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் உடலுறவு..!? வித்தியாசமான உணர்வாக இருக்கும்!! ஆனா மறந்தும் இதை செஞ்சிடாதீங்க!!

நீண்டகால உணர்வு ரீதியான பிணைப்பும், உடல்ரீதியான பிரிவும் ஒரு சேர எழும் காலம் கர்ப்ப காலம். உங்கள் துணை....

Saleth stephi graph

காதல் கொண்ட இணையரின் வாழ்க்கையில் ஆரோக்கியமாக பின்பற்றப்படவேண்டிய ஒரு நடைமுறை என்றால் அது உடலுறவுதான். உடலியல் தேவை என்பது மிக இயற்கையானது மேலும் ஆண் பெண் இருபாலருக்கும் சம அளவில் தேவையான ஒன்று. ஒரு நல்ல காதலுக்கு, புரிதல், நேரம், அன்பு, ஈர்ப்பு இவையெல்லாம் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு காமமும் அவசியம். அது பார்ட்னர்கள் இருவரின் விருப்பு வெறுப்புகள் சங்கமிக்கும் ஒரு இடம், கவனமாக கையாள வேண்டிய ஒரு இடமும் ஆகும்.

கர்ப்ப காலத்தில் உடல் உறவு!

நீண்டகால உணர்வு ரீதியான பிணைப்பும், உடல்ரீதியான பிரிவும் ஒரு சேர எழும் காலம் கர்ப்ப காலம். உங்கள் துணை உங்கள் உயிரை சுமக்கிறார், உங்களுக்கு ஒரு குழந்தை வரப்போகிறது, என்ற அலாதியான சூழலில் நீங்கள் உங்கள் துணையின்மீது மிகுந்த பிரியத்தோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். 

உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் 

ஒரு பெண் கருவுறும்போது உடல் மற்றும் உளவியல் ரீதியாக பலவகையான மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும். ஒட்டுமொத்த ஹார்மோன் மாற்றங்களும் அப்போதுதான் எழும். 

கர்ப்ப  காலத்தில் உடலுறவு கொள்வதற்கான ஈடுபாடு பெண்களுக்கு அதிகளவில் குறையலாம். அதற்கு காரணம், வாந்தி, உடல் சோர்வு, மயக்கம் காரணமாக பெண்கள் உடல் உறவில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் மென்மையான காதல் நெருக்கத்தை அவர்கள் விரும்புவார்கள். ஆனால் இந்த சமயத்தில் உடலுறவு கொள்ளுவது நல்லதா? அப்படி உடலுறவில் ஈடுபட்டால் எந்தெந்த மாதங்கள் உகந்தது என்பதை குறித்து இக்கட்டுரையில் காணலாம். 

முதல் மூன்று மாதங்கள்..!

கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் உடல் உறவுகொள்வது, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் அப்போதுதான் கரு உருவாகியிருக்கும், பெண்ணின் உடல் அதற்கேற்றார் போல தனது உடலை தகவமைத்து இருக்காது, அந்த சூழலில் உடலுறவு கொண்டால் கருச் சிதையும் அபாயமும் உண்டு. ஆனால் கடைசி மூன்று மாதத்தில் உடலுறவு கொள்வதால் முன்கூட்டியே அதாவது குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள். 

யாரெல்லாம் உடலுறவை தவிர்க்கலாம்!!

உங்கள் கர்ப்பம் ஆரோக்கியமாக இருக்கிறது, எந்த பிரச்சனையும் இல்லை என்றால் நீங்கள் உடலுறவில் ஈடுபடலாம்.

கருவில் இரட்டையரோ, அல்லது ஏற்கனவே உடல் உறவு கொண்டு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ 7,8 -ஆம் மாதங்களில் உடல் உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். 

நீங்கள் எந்த பொசிஷனில் உடல் உறவு கொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம். ஆபத்தான எதையும் முயலக்கூடாது. மேலும் ஆண் பெண் இருபாலருக்கும் கர்ப்பகால உடல் உறவு நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். 

கருப்பை வாயில் ஏதேனும் தொற்று இருந்தால் உடலுறவை தவிர்க்க வேண்டும்.

கவனிக்க வேண்டியவை 

வயிறு வளர வளர உடலுறவு கொள்வது அசௌகரியமாக மாறலாம். உங்கள் துணையுடன் கலந்து பேசி, காதல் கொள்ள வேறு மாதிரியான வழிகளை கண்டறியலாம்.

ஆண்களுக்கு ஏதேனும் பாலியல் தொற்று ஏற்கனவே இருந்து அதோடு உடல் உறவு கொண்டால், குழந்தையையும் தாயையும்அது பெரிதாக பாதிக்கக்கூடும். அந்த விஷயத்தில் எப்போதும் காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது.

கருப்பையில் உள்ள அம்னோடிக் திரவமும், கருப்பையின் வலுவான தசைகளும் உங்கள் வளரும் குழந்தையைப் பாதுகாக்கின்றன. கர்ப்ப காலத்தில் குறைப்பிரசவம் அல்லது நஞ்சுக்கொடி பிரச்சினைகள் போன்ற உடல்நலக் கவலைகள் இல்லாவிட்டால், உடலுறவு கொள்வது உங்கள் குழந்தையைப் பாதிக்காது. 

எனவே, கர்ப்ப கால உடல் உறவு பல மடங்கு கவனத்துடன் கையாள வேண்டிய ஒன்று எனவே உங்கள் துணையுடன் உரையாடி உரியமுறையில் உடல் உறவு கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.