couple  
லைஃப்ஸ்டைல்

உடலுறவின் போது செய்யக்கூடாத விஷயங்கள்…! பாலியல் தொற்றில் (STD) சிக்கிட்டா அவ்வளவுதான்..!

நீங்கள் உடலுறவில் active -ஆக இருக்கும் சமயங்களில் சில விஷயங்களை கவனமாக கையாண்டால் இது போன்ற....

மாலை முரசு செய்தி குழு

காதல் நிறைந்த தம்பதியரின் வாழ்வு ஒரு நல்ல தாம்பத்யம் இல்லாது முழுமையடையாது.  ஆனால் ‘sex’ -ல் உங்கள் பாட்னரை திருப்திப்படுத்த பல விஷயங்கள் செய்யக்கூடும். அப்போதுதான் நீங்கள் STD என்று சொல்லப்படுகிற பாலியல் தொற்று குறித்து கவனமாக இருக்க வேண்டியது, மிகவும் அவசியம். நீங்கள்  உடலுறவில் active -ஆக இருக்கும் சமயங்களில் சில விஷயங்களை கவனமாக கையாண்டால் இது போன்ற உடல் கோளாறுகளிலிருந்து தப்பலாம்.

ஆணுறைகளை பயன்படுத்தவும்..

உங்கள் இணையர் சில சமயங்களில் ஆணுறை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினால், பேசி புரிய வையுங்கள், ஏனெனில் நீங்கள் monogamous -ஆக (ஒரு நபருடன் மட்டுமே உடலுறவில் இருக்க கூடியவர்) இருந்தால் கூட,  உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

உணவு பொருட்களை பயன்படுத்துதல்..

உடலுறவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இயங்கும், சிலருக்கு காரில், கிச்சனில், இப்படி ஒவ்வொரு இடங்களை விரும்புவர். அதே போல ‘சாக்லேட், ஐஸ் கட்டி, பழச்சாறு’ போன்றவை பயன்படுத்துவதும் வழக்கம். ஆனால் இதுவும் தொற்றுக்கு வழிவகுக்கும், மேலும் உணவுப்பொருட்கள் ஏதாவது உங்கள் அந்தரங்க உறுப்பில் சிக்கிக்கொண்டால் அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அதிகமாக மது அருந்துவதை தவிர்க்கவும் 

எங்காவது வெளியில் செல்லும்போது யாராவது உங்களை மது அருந்தச்சொல்லி உங்களை வற்புறுத்துவதாக  தோன்றினால், தயங்காமல் அவர்களுக்கு “இல்லை” என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் மது அருந்தியிருக்கும்போது, உங்கள் சுய  கட்டுப்பாடு குறைந்து விடும். இதனால், பாலியல் விஷயங்களில் பரிசோதனை செய்யும் மனநிலை அதிகரிக்கும். உண்மையில், பல இளைஞர்கள் தாங்கள் மது அருந்தியபோது தங்களின் கன்னித்தன்மையை இழந்ததாக ஒப்புக்கொள்கிறார்கள். ஆகையால், பாலுறவிற்கு முன் அதிகமாக மது அருந்துவதை தவிர்க்கவும்.

‘No சொல்ல பழகிக்கொள்ளுங்கள்’ 

உங்கள் இணையர் தூய்மையாக இல்லாமல் இருப்பது போலவோ அல்லது உங்களுக்கு விருப்பம் இல்லாத வழிகளிலோ உடலுறவுக்கு உங்களை தூண்டினால் ஒருபோதும் அதற்கு ஒப்புக்கொள்ளாதீர்கள், தீர்க்கமாக மறுக்க முயலுங்கள்.

ஏனென்றால் விருப்பத்திற்கு மீறி நீங்கள் உடலுறவில் செய்யும் ஒவ்வொரு காரியமும் தவறுதான்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.