பெண்களுக்கு வழக்கமா மாதம் மாதம் நடக்குறதுதா இந்த "menstrual cycle " இன்னுமும் நம்ம சமூகத்துல menstrual cycle ன பெண்களுக்கு ஒரு நான்கு நாட்களோ ஐந்து நாட்களோ நடக்குற ஒரு சுழற்சினு தா நெனச்சிட்டு இருக்காங்க, ஆனா இந்த மாதவிடாய் சுழற்சி என்பது மொத்தம் 28 நாட்கள் நடக்குது முதல் நாள் தொடங்கி 28 நாள் வரைக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் நடக்க தொடங்கும் அதில் முதல் ஏழுநாள் தான் Menstruation period னு சொல்லுவோம்.
இந்த Menstruation நேரத்துல தான் பெண்களுக்கு மூட் ஸ்விங் அதிகமா நடக்குது, அது மட்டுமில்லாமல் இந்த Menstruation நாட்களுக்கு, முன்னாடி இருக்குற பாத்து நாள் தான் பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் லெவெலும் அதிகமா இருக்கும் இதுக்கு காரணம் மாதவிடாய் நேரத்துல நம்ப உடம்பில் சுரக்கிற ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜஸ்டிரான் ஹார்மோன்கள் நமது உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஹார்மோனான செரிடோனின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை மருத்துவர்கள் pms என குறிப்பிடுறாங்க.
PMS- Premenstrual Syndrome
PMS-னு சொல்றது Premenstrual Syndrome. அதாவது, பீரியட்ஸ் வர்றதுக்கு முன்னாடி ஒரு வாரம், பத்து நாள் மனசுலயும் உடம்புலயும் வர்ற மாற்றங்கள். இது ஒவ்வொரு பெண்களுக்கும் அவங்க அவங்க வாழ்க்கை முறை மற்றும் உடம்பு விதத்தை பொறுத்து மாறும், சில பேருக்கு லேசான தலைவலி, முதுகு வலி, மூட் ஏற்ற இறக்கம். ஆனா, சில பேருக்கு இது ரொம்பவே இன்டென்ஸா இருக்கும் – எரிச்சல், பயம், கவலை, அழுகை, எதையாவது தொட்டு பார்த்தாலே கோவம் வந்துடற மாதிரி.
நம்ம மருத்துவர்கள் சொல்றது என்னனா, இந்த PMS உலகத்துல 20-40% பொண்ணுங்களுக்கு வருது. இதுல சில பேருக்கு PMDD (Premenstrual Dysphoric Disorder)னு ஒரு தீவிரமான வடிவமும் இருக்கு, இது 3-8% பேரை பாதிக்குது. PMDD-னா, PMS-ஓட அறிகுறிகள் இன்னும் கூடுதலா, டிப்ரெஷன் மாதிரி மாறுறது. இதுக்கு மருத்துவரை கண்டிப்பா அணுகனும்னு சொல்றாங்க.
தீர்வுகள்
என்ன பண்ண இந்த pms மற்றும் pmdd ல இருந்த நம்மள பாதுகாத்துக்கலாம்னு சில மருத்துவர்கள் சொன்ன அறிவுரைகளையும், வாழ்க்கை முறையையும் நம்ம தெரிஞ்சிப்போம்.
உணவு கவனம்:
சர்க்கரை, உப்பு, பாஸ்டு ஃபுட்ஸ் போன்றவற்றை குறைச்சுக்கோங்க. அதுக்கு பதிலா, பழங்கள், காய்கறிகள், நட்ஸ், முழு தானியங்கள் மாதிரி ஆரோக்கியமான உணவை எடுத்துக்கோங்க.
கால்சியம் மற்றும் மெக்னீஷியம் உள்ள உணவுகள் (பால், பச்சை காய்கறிகள், பாதாம்) PMS அறிகுறிகளை குறைக்கும் அதனால உணவோட இதை எல்லாம் சேத்துக்கோங்க, நிறைய தண்ணி குடிங்க இது நம்ம உடம்பு ப்ளோட்டிங்கை குறைக்கும்.
உடற்பயிற்சி:
ஒரு நாளைக்கு 30 நிமிஷம் நடை, யோகா, அல்லது லேசான எக்ஸர்ஸைஸ் பண்ணுங்க. இது எண்டார்ஃபின்ஸ் (சந்தோஷ ஹார்மோன்) ரிலீஸ் பண்ணி, மூடை நல்லா வைக்கும்.
யோகா பண்றதால நம்ம ஹோர்மோன்கள் சமமாகி இந்த pms குறையும்னு, மருத்துவர்கள் சொல்றாங்க.
தூக்கம்:
ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குறது முக்கியம். தூக்கமின்மை மூட் ஸ்விங்ஸை மோசமாக்குது.
படுக்குறதுக்கு முன்னாடி ஃபோனை தள்ளி வச்சுட்டு, ஒரு புத்தகம் படிகிறதோ அல்லது மெடிடேஷனோ பண்ண நல்ல துக்கம் வரும்.
மனசை கவனிச்சுக்கோங்க:
மைண்ட்ஃபுல்னெஸ் மற்றும் மெடிடேஷன் மன அழுத்தத்தை குறைக்குது. ஒரு 5 நிமிஷம் ஆழ்ந்து மூச்சு விடுறது கூட பெரிய மாற்றத்தை கொண்டு வரும். உங்களுக்கு எரிச்சல், கவலை அதிகமா இருந்தா, ஒரு டைரில எழுதி பாருங்க. இது மனசை லேசாக்கும்.
ஒரு நல்ல பாட்டு கேக்குறது, ஒரு நடை போறது, இல்ல ஒரு சாக்லேட் சாப்பிடுறது – இதெல்லாம் சின்ன விஷயமா தெரிஞ்சாலும், பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
மருத்துவ உதவி:
PMS அறிகுறிகள் ரொம்ப தீவிரமா இருந்தா (PMDD மாதிரி), ஒரு மருத்துவரை பாருங்க. சில சமயம் SSRI மருந்துகள் (டிப்ரெஷனுக்கு உபயோகப்படுத்துறவை) அல்லது ஹார்மோன் சிகிச்சை உதவுது.
வைட்டமின் B6, மெக்னீஷியம் சப்ளிமென்ட்ஸ் சில பேருக்கு உதவுது, ஆனா இதை மருத்துவர் கன்சல்ட் பண்ணாம எடுக்காதீங்க.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்