மற்றவை

13 மணிநேரமாக அதிகரிக்கும் மின்தடை... அறுவை சிகிச்சைகளை ரத்து செய்யும் மருத்துவமனைகள்... நோயாளிகளின் நிலை என்ன?

இலங்கையில் 13 மணிநேர மின்தடை - அறுவை சிகிச்சைகளை ரத்து செய்த மருத்துவமனைகள்!

Tamil Selvi Selvakumar

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 13 மணிநேர மின்தடையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 10 மணிநேர மின்தடை அமலில் இருந்த நிலையில், தற்போது மின்தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் முக்கிய தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருளை சிக்கனம் செய்யும் வகையில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மின்தடையால் அறுவை சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை முக்கிய மருத்துவமனைகள் ரத்து செய்துள்ளன.

இதனால், உரிய சிகிச்சையின்றி நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.