மற்றவை

சட்டவிரோதமாக கனடா நாட்டிற்கு கடல் வழியாக செல்ல இருந்த 44 இலங்கை தமிழர்கள் கைது...

சட்டவிரோதமாக கனடா நாட்டிற்கு கடல் வழியாக செல்ல இருந்த 44 இலங்கை தமிழர்கள் மங்களூருவில் கைது  செய்யப்பட்டனர். 

Malaimurasu Seithigal TV

இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகத்திற்கு வந்து தமிழகத்திலிருந்து சாலை மார்க்கமாக மங்களூரு வந்துள்ளனர். மங்களூருவில் இருந்து மீண்டும் தூத்துக்குடி சென்று அங்கிருந்து கடல் மார்க்கமாக கனடா நாட்டிற்கு செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இவர்களை கனடா நாட்டிற்கு அனுப்பி வைக்க புரோக்கர் ஒருவர் ஒவ்வொருவரிடம் இருந்து 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக ஏற்பட்ட ஊர் அடங்கினால் கடந்த இரண்டு மாதங்களாக இவர்கள் அனைவரும் மங்களூருவில் பல்வேறு விடுதிகளில் தங்கி இருந்தனர். இந்ததகவலை அறிந்த   தூத்துக்குடி போலீசார்  உடனடியாக மங்களூரு போலீசாரிடம் தெரிவித்தனர்.   இதன்  அடிப்படையில் மங்களூர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 44 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடு செய்த புரோக்கரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போலீசார் இணைந்து தேடி வருகின்றனர். சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்தல்,  பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.