மற்றவை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...!

Tamil Selvi Selvakumar

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, புயலாக மாற வாய்ப்புள்ளது எனவும் அறிவித்துள்ளது. 

மேலும் இந்த புயலானது, தென்கிழக்கு வங்ககடல்  மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலில் இருந்து மே 10 ஆம் தேதி வடக்கு-வடமேற்கு திசையிலும், கிழக்கு - மத்திய வங்க கடல் நோக்கி மே 11ஆம் தேதி வரை நகரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டு, வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம்-மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.