மற்றவை

அமைச்சரின் தோளில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்ட குரங்கு... வீடியோ வைரல்

கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, குரங்குகளுக்கு கூடை கூடையாக வாழைப்பழம் உணவளித்து மகிழ்ந்தார். அப்போது ஒரு குரங்கு அமைச்சரின் தோளில் அமர்ந்து பழத்தை உண்ணும் காட்சி வளைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

கர்நாடக போக்குவரத்து அமைச்சராக இருக்கும் ஸ்ரீராமுலு இன்று கொப்பல் மாவட்டம் கொப்பல் நகரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் கங்காவதி கோவிலுக்கு சென்ற போது அங்கு இருந்த நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு கூடை கூடையாக வாழைப் பழங்களை வாங்கி வந்து உணவளித்தார்.

அனைத்து குரங்குகளும் அமைச்சரின் கையில் இருந்து வாழைப்பழத்தை வாங்கி சென்ற நிலையில் ஒரே ஒரு குரங்கு அமைச்சரின் தோள்பட்டையில் ஏறி அமர்ந்து கொண்டு அவரது கையிலிருந்து வாழைப்பழத்தை வாங்கி உண்டு மகிழ்ந்தது. 

குரங்குகளுக்கும் பழங்கள் பரிமாறிய பிறகு அமைச்சர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அமைச்சரின் தோள்பட்டையில் அமர்ந்தவாறு குரங்கு பழத்தை வாங்கி உண்ணும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.