மற்றவை

இந்தி தெரியாது என பிரதமர் மோடியிடம் கூறிய ஜப்பான் வாழ் இந்திய சிறுவன்..!

தன்னிடம் பேசிய பிரதமர் மோடியிடம் இந்தி தெரியாது என தெரிவித்ததாக ஜப்பானில் அவரை வரவேற்ற ஒரு சிறுவன் தெரிவித்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

குவாட் அமைப்பின் 2வது உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் சென்றடைந்தார். இவரின் வருகையை ஜப்பான் வாழ் இந்தியர்கள் வரவேற்ற நிலையில், ஜப்பானிய சிறுவர்களும் அவரை வரவேற்றனர்.

அப்போது தன்னிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தி தெரியுமா என கேட்டதாகவும், அதற்கு தெரியாது என பதிலளித்ததாகவும் ஒரு சிறுவன் தெரிவித்துள்ளார்.

இந்தி பேசிய மற்றொரு ஜப்பானிய சிறுவனைக் கண்டு பாராட்டிய பிரதமர் மோடி, அவர் வரைந்த ஓவியத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.