மற்றவை

மீண்டும் ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன்!!

Malaimurasu Seithigal TV

காட்டுப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன், மீண்டும் ஊருக்குள் வந்து தேயிலைத் தோட்டப் பகுதியில் வலம் வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய  பகுதிகளில் அரி கொம்பன் யானை புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான நாலு முக்கு,  ஊத்து, குதிரை வெட்டி, உள்ளிட்ட பகுதிகளில் அரிக்கொம்பன் யானை வலம் வருகிறது. 

கடந்த மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதிகளை சுற்றி வலம் வந்து அருகில் உள்ள வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இந்நிலையில், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

மேலும், அரிக்கொம்பன் யானை குறித்த எந்த தகவலும் பரவாமல் இருக்க ஊத்து மற்றும் நாலுமுக்கு கிராமங்களில் இணைய சேவையை வனத்துறையினர் துண்டித்துள்ளனர். அதே போல், செய்தியாளர்களும் மலை கிராமங்களுக்கு சென்று செய்தி சேகரிக்க தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.