மற்றவை

ஆட்டோ- இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து....பதைபதைக்கும் சிசிடிவி காட்சி...!

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் இதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மங்களூர் போலீஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது முதல்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர். ரோடு ஓரத்தில் அமைந்திருந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுக்கொண்டு மெயின் ரோடு நோக்கி வந்துள்ளார்.

அப்போது மெயின் ரோட்டில் அதிவேகமாக வந்த ஆட்டோவும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஹெல்மட் அணிந்திருந்ததால் படுகாயத்துடம் உயிர் தப்பியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.