மற்றவை

தடையை மீறி குளியல்...ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்...

புதுச்சேரி மலட்டாற்றில் தடையை மீறி ஆற்றில், குளித்த இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நெட்டப்பாக்கம்  தொகுதிக்கு உட்பட்ட வடுகுப்பம் மலட்டாற்றில் மழை காரணமாக அதிகளவில் தண்ணீர் சென்றதால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த்து.

இந்நிலையில் தடையை மீறி அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் நேற்று ஆற்றில் குளித்துள்ளார்.  அப்போது ஆற்றின் நீரில் மூழ்கி  உதயகுமார் மயமானதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இரவு முழுவதும் உதயகுமாரின் உடலை தீவிரமாக தேடினர். அதனை தொடர்ந்து இன்று உதயகுமாரின் உடலை தீயணைப்புவீரர்கள் சடலமாக் மீட்டனர்.