மற்றவை

காட்டுக்குள் கால்பந்து விளையாடிய கரடிகள்- கைதட்டி ஆரவாரம் செய்த சிறுவர்கள்....

ஒடிசா மாநிலம் நபரங்குபூர்  மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இரண்டு காட்டு கரடிகள் கால்பந்து விளையாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

ஒடிசா மாநிலம் நபரங்குபூர்  மாவட்டம்  உமார்கோட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சில சிறுவர்கள், அந்த பகுதியில் உள்ள வனத்தில் கால்பந்து விளையாடிவிட்டு, பந்தை அங்கேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கு வந்த இரண்டு கரடிகள் கால்பந்தை ஒரு வினோதப்பொருளாக பார்ப்பது மட்டுமல்லாமல் அதை வாயால் எடுப்பதும், தட்டியும் உதைத்தும் விளையாடி மகிழ்ந்தன. இந்த காட்சிகளை துரமாக நின்று வேடிக்கை பார்த்த சிறுவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்த கரடிகள் பந்தை கவ்விக்கொண்டு வேகமாக காட்டிலுள் சென்றன. இந்த காட்சியை அங்கிருந்த  சிலர் தங்களது ஸ்மார்ட் போன்களில் படம்பிடித்தனர்.  தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.