ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார், உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். தங்க கடத்தலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்தநிலையில் ஜாமீனில் இருந்தபடி நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்வப்னா சுரேஷ், வழக்கு தொடர்பாக அனைத்து உண்மைகளையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா,முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பினராயி விஜயன், அவை ஆதாரமற்றவை என்றும், அரசியல் காழ்புணர்ச்சியுடன் தன் மீது பொய் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.