மற்றவை

பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு தடை : மாற்று வழியை யோசித்த பாஜக

கொரோனா எதிரொலியாக சமூக ஊரடங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா எதிரொலியாக சமூக ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் கொரோனா அதிகரிப்பின் விளைவாக  பிரச்சார பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதனால் அரசியல் கட்சிகள் மக்களை சந்தித்து, தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், சமூக ஊடகங்களை தேர்தல் பிரச்சார கருவியாக பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது.

சிறு சிறு பிரச்சார நிகழ்வுகளை நடத்தி, அதனை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவதன் மூலம் மக்களை சென்று சேர பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சார நிகழ்ச்சிகள் சமூக ஊடக தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.