எனர்ஜி இன்ஸ்டிடியூட் (EI) வெளியிட்டுள்ள உலக எரிசக்தி புள்ளிவிவர ஆய்வு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் உற்பத்தி 0.6 சதவீதம் அதிகரித்து, ஒரு நாளைக்கு 97 மில்லியன் பீப்பாய்களை எட்டியுள்ளது. OPEC அல்லாத நாடுகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்கா தொடர்ந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகத் திகழ்கிறது. அந்நாடு ஒரு நாளைக்கு 20,135 ஆயிரம் பீப்பாய்களை உற்பத்தி செய்து, உலகளாவிய விநியோகத்தில் 20.8 சதவீதப் பங்களிப்பை அளிக்கிறது. அமெரிக்காவின் உற்பத்தி, சவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் மொத்த உற்பத்திக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது. சவூதி அரேபியா இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளும் இணைந்து உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட கால் பங்கை வழங்குகின்றன.
எண்ணெய் வாங்குவதிலும் அமெரிக்காதான் முன்னிலை வகிக்கிறது. அந்நாடு ஒரு நாளைக்கு 18,995 ஆயிரம் பீப்பாய்களைப் பயன்படுத்துகிறது, இது உலகளாவிய தேவையில் 18.7 சதவீதமாகும். நுகர்வுப் பட்டியலில் சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய ஆறு நாடுகள் உற்பத்தி மற்றும் வாங்குதல் ஆகிய இரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்றுள்ளன. இது உலக எண்ணெய் சந்தையில் அவற்றின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, டாப் 10 எண்ணெய் நுகர்வு நாடுகள் உலகளாவிய தேவையில் 61% பங்களிப்பை அளிக்கின்றன, அதே நேரத்தில் டாப் 10 உற்பத்தி நாடுகள் விநியோகத்தில் 73.8% பங்களிப்பை வழங்குகின்றன.
2024-25-ல் டாப் 10 எண்ணெய் உற்பத்தி நாடுகள்:
வ.எண் | நாடு | உற்பத்தி ( பீப்பாய்கள்) | உலகளவில் பங்கு (%) |
---|---|---|---|
1 | அமெரிக்கா | 20,135 | 220.80% |
2 | சவூதி அரேபியா | 10,856 | 11.20% |
3 | ரஷ்ய கூட்டமைப்பு | 10,752 | 11.10% |
4 | ஈரான் | 5,062 | 5.20% |
5 | கனடா | 5,888 | 6.10% |
6 | ஈராக் | 4,398 | 4,398 |
7 | சீனா | 4,264 | 4.40% |
8 | ஐக்கிய அரபு அமீரகம் | 4,006 | 4.10% |
9 | பிரேசில் | 3,466 | 3.60% |
10 | குவைத் | 2,719 | 2.80% |
2024-25-ல் டாப் 10 எண்ணெய் வாங்கும் நாடுகள்:
வ.எண் | நாடு | நுகர்வு (பீப்பாய்கள்) | உலகளவில் பங்கு (%) |
---|---|---|---|
1 | அமெரிக்கா | 18,995 | 18.70% |
2 | சீனா | 16,374 | 16.10% |
3 | இந்தியா | 5,621 | 5.50% |
4 | ஜப்பான் | 3,238 | 3.20% |
5 | ரஷ்ய கூட்டமைப்பு | 3,846 | 3.80% |
6 | சவூதி அரேபியா | 3,959 | 3.90% |
7 | தென்கொரியா | 2,892 | 2.90% |
8 | பிரேசில் | 2,575 | 2.50% |
9 | ஜெர்மனி | 2,052 | 2% |
10 | கனடா | 2,333 | 2.30% |
source: எனர்ஜி இன்ஸ்டிடியூட் - 2025 - உலக எரிசக்தி புள்ளிவிவர ஆய்வு அறிக்கை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.