பங்குசந்தையில் முதலீடு மற்றும் Trading செய்வதை பற்றி தெறித்திருப்பீர்கள். ஆனால் SIP ( Systematic investment plan) சேமிப்பு பற்றி நாம் தெரிந்துந்துகொள்ள தவறிவிட்டீர்களா? இப்போது SIP முதலீடு என்றால் என்ன? இதனால் ஏற்படும் நன்மை தீமை என்ன? மேலும் அதன் செயல்வடிவம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
SIP (Systematic investment plan) என்பது முறைசார் முதலீட்டு திட்டம். Mutual Fund திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்வதற்கான வழிமுறையே இந்த SIP முதலீட்டு திட்டம். இதில் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை தவணையாகச் செலுத்தி முதலீடு செய்ய முடியும்.
அடிப்படையான 5 திட்ட வழிமுறைகள்:
எளிமையான SIP:
ஒரு குறிப்பிட்ட தொகையை, நீங்கள் தேர்தெடுக்கப்பட்ட தேதியில் முதலீடு செய்வது. இது யாருக்கு சரியாக இருக்கும் என்றால் தொடக்க முதலீட்டாளர்கள், நிந்தர மாத வருமானம் உள்ளவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் நீண்டகால சேமிப்பு இலக்குக்கு உள்ளவர்களுக்கு பொருத்தும். இது ஒரு ஒழுங்குநிலை முதலீடாக இருக்கும்.
SIP விரைவுபடுத்துதல்:
ஒவ்வொரு ஆண்டும் கணிசமான SIP தொகையை அதிகரிக்க அனுமதிக்கும் படிநிலை முதலீடு. இது வருடாந்திர சமபள உயர்வு பெரும் ஊழியர்கள் மற்றும் சேமிப்பை அதிகரிக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு பொருந்தும். இது உங்கள் முதலீட்டு திட்டத்தை ஒரு கனிசமான சதவீதத்தில் உயர்த்தும், மேலும் வருடத்திற்கு 10% அதிகரிப்பு கூட நீண்டகாலத்தில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
பிளக்ஸிபல் SIP:
இந்த முதலீடு திட்டம் பங்குச்சந்தையை கண்காணித்து முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பொருந்தும். பங்குசந்தை நிலை மற்றும் நிதிநிலை மாற்றங்கள் அடிப்படையில் SIP தொகையை அதிகரிக்க அல்லது குறைக்க அனுமதிக்கிறது. இதன்மூலம் SIP ஒழுங்கையும், சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தும் சுதந்திரத்தையும் ஒருசேர வழங்குகிறது.
மார்க்கெட் குறைந்தால் – அதிக தொகை முதலீடு
மார்க்கெட் உயர்ந்தால் – குறைந்த தொகை முதலீடு
அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை அடிப்படையிலான தொழிநுட்பம் தெரிந்தவர்களுக்கு இது பொருத்தமான முதலீடு திட்டமாக இருக்கும்.
தொடர்ச்சியான முதலீடு:
இந்த முதலீடு திட்டத்தில் குறிப்பிட்ட முடிவு தேதி எதுவும் இல்லாமல், முதலீட்டாளர் ரத்து செய்யும் வரை உங்கள் SIP திட்டம் தொடரும். இது ஓய்வூதிய திட்டம் போன்ற நீண்டகால இலக்குகள் கொண்டவர்களுக்கும்,
ஒரு குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட இலக்கிற்காக சேர்க்கப்படும் சேமிப்பு திட்டமாக கருத்துபவர்களுக்கு பொருந்தும். இதை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, கூட்டு வட்டி சதவீதம் இடையுறாது செயல்படும்.
டைவர்சிபைட் முதலீடு:
ஒரே பயனர் கணக்கிலிருந்து பல்வேறு Mutual Fund திட்டங்களில் தொகையை பிரித்து முதலீடு செய்து தனது SIP திட்டத்தை பல்வகைப்படுத்தி பயன்பெரும் திட்டம். ஒரே முதலீட்டில் பல SIP வகைகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு பொருந்தும். இது உங்கள் முதலீட்டு திட்டத்தை பண்படுத்தி ஒரே திட்டத்தில் தேங்கி விடாமல் பல Mutual Fund-ல் முதலீடு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
சாய்ஸ் இஸ் யூர்ஸ்:
பங்குசந்தையில் டிரேடிங் அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் தொடக்கநிலை முதலீட்டாளர்களுங்கும் இது ஒரு சிறந்த சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டமாக இருக்கும். அதில் பல தரப்பட்ட வழிமுறைகளும் உள்ளது. தங்களுக்கு தேவையான அல்லது பொருந்தும் SIP திட்டத்தை தேர்வுசெய்து பயன் பெறலாம். டிரேடிங் குறித்த பயத்திற்கும், இழப்பு குறித்த அபாயத்தை குறைக்கவும் இந்த வழிமுறைகள் உதவும் மேலும் நம் நேரத்தையும், சேமிப்பின் மீதான குழப்பமான மனநிலையும் பாதுக்காக்கும்.
எந்த SIP திட்டமாக இருந்தாலும், முக்கியமானது தொடர்ந்த முதலீடு மற்றும் நிதானமும் தான். SIP சேமிப்பு, நீண்டகால நிதி சுதந்திரத்துக்கு வழி வகுக்கும் மேலும் உங்கள் முதலீட்டை பண்படுத்ததும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.