மற்றவை

"கீழ்த்தரமான அரசியல் செய்யும் மத்திய அரசு" - மல்லிகார்ஜூன கார்கே

Tamil Selvi Selvakumar

மத்திய அரசு கீழ்த்தரமான அரசியலை செய்து வருகிறது என குடியரசுத்தலைவரின் ஜி20 விருந்து தொடர்பாக மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

ஜி20 மாநாட்டையொட்டி, முன்னாள் பிரதமர்கள், மாநில முதலமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், தொழிலதிபர்கள், அரசியல்கட்சித் தலைவர்களுக்கு இன்று ஜி20 விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கேபினட் அமைச்சர் அந்தஸ்து இருந்தும் கார்கே விருந்துக்கு அழைக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. தொடர்ந்து கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, மேம்பட்ட அரசியல் பாணியை விடுத்து, மத்திய அரசு கீழ்த்தரமாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார்.