மற்றவை

புதுச்சேரியில் மேலும் 4 மாணவர்களுக்கு கொரோனா - கலக்கத்தில் பொதுமக்கள்

புதுச்சேரியில் ஒரே அரசு பள்ளியில் இன்று மேலும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது இந்நிலையில் புதுச்சேரி கரையாம்புத்தூர் அரசு மேல் நிலைய பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களுக்கு நேற்று உடல் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்ததது.

அந்த வகையில் தொற்று பாதித்த மாணவருடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்கு இன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் 1 மாணவி மற்றும் 3 மாணவர்கள் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே பள்ளியிக் படிக்கும் 7 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது அந்த கிராமத்து மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.