மற்றவை

கொரோனா பாதித்த ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு!?

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்னை ஏற்படுவதாக நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்னை ஏற்படுவதாக நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளான பலரும், அதிலிருந்து மீண்ட பின், ஸ்டீராய்டு பயன்பாடு காரணமாக பல்வேறு பக்கவிளைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல் கொரோனாவால் இனப்பெருக்கம் சார்ந்த பாதிப்பையும் மக்கள் சந்திக்க கூடும் என தகவல் வெளியாகவே, ஆக்ராவில் உள்ள பிரபல செயற்கை கருத்தரிப்பு மையம் அதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. அதன் முடிவில்,  கொரோனாவிலிருந்து மீண்டு 60 நாட்களான ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இனப்பெருக்கத்திற்கான ஹார்மோன்கள் சுரப்பது வெகுவாக குறைவதால், விந்தணுக்களின் வேகம் குறைவதோடு, அதன் எண்ணிக்கையும் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.