இந்த ஆண்டு உண்மையிலேயே நம்மக்கு தனித்துவமான ஆண்டுதான். இன்னும் கதிரிவெயிலே முயூடிவடையாத நிலையில் மழைக்காலம் துவங்கிவிட்டது. ஏற்கனவே நமக்கு சம்மர் முடிந்துவிட்டதாக தமிழ்நாடு weather man அறிவித்திருந்தார், இந்நிலையில் அரபிக் கடலில் இன்று காலை 5:30 மணி அளவில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்