மற்றவை

இந்தியாவில் கடந்த 75 நாட்களில் இல்லாத அளவாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...

இந்தியாவில் கடந்த 75 நாட்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரமாக சரிந்துள்ளது. 

Malaimurasu Seithigal TV

கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 1 லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்தம் 2 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரத்து 472 பேர் குணமடைந்து உள்ளனர். 

மேலும், தொடர்ந்து 33ஆவது நாளாக பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 726 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கையானது 3 லட்சத்து 77 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது. 


அதேசமயம், இந்தியா முழுவதும் 9 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 72 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.