மற்றவை

சபரிமலை கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய அனுமதி.!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது.

Malaimurasu Seithigal TV

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது.

எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்கு செல்லும் 38 கி.மீ. தொலைவு உள்ள பெருவழிபாதையும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.

கோவிட் பரவல் குறைந்துவரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 45 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.