மற்றவை

இந்திய நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் புகுந்ததா?

இந்திய நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் புகுந்ததாக கூறும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு நம்பும் படியாக இல்லை என இந்திய கடல் சார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

இந்திய நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் புகுந்ததாக கூறும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு நம்பும் படியாக இல்லை என இந்திய கடல் சார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாகிஸ்தான் கடல்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், சுமார் 12 கடல் மைல் தொலைவு வரை உள் வந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால் பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு நம்ப தகுந்ததாக இல்லை என இந்திய கடல் சார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறும் அவர்கள், இந்திய  நீர்மூழ்கி கப்பல் தங்கள் எல்லைக்குள் புகுந்ததாக பாகிஸ்தான் கூறும் பகுதி, கராச்சி துறைமுகத்திலிருந்து 150 கடல் மைல் தொலைவில் உள்ளதாகவும், அது பாகிஸ்தான் எல்லைக்கு அப்பாற்பட்டது எனவும் கூறியுள்ளனர். ஆனால் பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய கடற்படை தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.