மற்றவை

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக எடியூரப்பா அதிரடி அறிவிப்பு...

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது சொந்த கட்சியிலேயே பலரும் எதிர் கருத்தை தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக கர்நாடக மாநில பா.ஜ.க.-வில் புகைச்சல் நீடிக்கிறது. எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேலாகிவிட்டதால் அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என எடியூரப்பாவுக்கு எதிராக இருக்கும் பா.ஜ.க, எம்.எல்.ஏ.,க்கள் மேலிட பொறுப்பாளர்களுக்கு கையெழுத்துடன் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை மேலிட பொறுப்பாளர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதனால், முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா, தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினார். 

இதுகுறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடியூரப்பா,  பா.ஜ.க,வின் உண்மையான தொண்டனாக இருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும், வரும் 25 ஆம தேதிக்கு பிறகு கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதன்படி பணியாற்ற தயாராக உள்ளதெனவும் குறிப்பிட்டார். இதனிடையே வரும் 26-ந் தேதி நடைபெற உள்ள பா.ஜ.க, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்யவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.