மற்றவை

பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 80 பள்ளி குழந்தைகள்...

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியாமல் 80 குழந்தைகள் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஹவேரி என்ற கிராம பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல் பட்டு வரும் நிலையில் வழக்கமாக மதிய உணவு அளிக்கப்பட்டுள்ளனர்.மதிய உணவை உண்ட குழந்தைகள் அனைவரும் சிறுது நேரத்தில் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.   

இதனை தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு இருந்த 80 குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். குழந்தைகளுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பியதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்த காவல்துறையினர் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததை கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.