ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், அதிகாலை 3.27 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அதிகாலை 4.34 மணிக்கு மீண்டும் 10.கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்ட்ர் அளவு கோலில் 4 .0 -ஆக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தங்கி வருகின்றனர். ஏற்கனவே அம்மாநிலத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கமும் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.