சுற்றுச்சூழல்

ஆவின் பணியாளர்களின் அகவிலைப்படி சமன் செய்து உத்தரவு..!

Malaimurasu Seithigal TV

ஆவின் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகவிலைப்படியை சமன் செய்து அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் சேலம், மதுரை, திருச்சி, உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப் படி உயர்த்தப்பட்டது.

எஞ்சிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், சீரான 
அகவிலைப் படி வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அனைத்து மாவட்ட  பால் உற்பத்தியாளர்களுக்கும் 38 சதவீதம் அகவிலைப் படியை வழங்க பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.