வருகிற ஜூன் 1-ஆம் தேதி முத கேரளாவில் தென் மேற்கு பருவமழை தோன்றும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளில் முதல்முறையாக, முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத்தொடங்கி உள்ளது.கோவா, மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் இன்று மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளாவின் கண்ணூர், காசர்கோடு பகுதிகளில் மழை வலுக்கும் என்பதால் அங்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 25,26 அங்கு தவிர மழைக்கு வாய்ப்புண்டு.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கேரளா, லட்சத்தீவு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்